தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

போர் தொடுத்த ரஷ்யாவுக்கு தண்டனை - சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி பாரீசுக்கு மாற்றம் - சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை அடுத்து நடப்பாண்டு சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் இறுதிப் போட்டி பிரான்ஸ் நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.

Champions League
Champions League

By

Published : Feb 25, 2022, 5:31 PM IST

ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து கிளப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதியாட்டம் வரும் மார்ச் 28ஆம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருந்தது. தற்போது ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தையே அச்சுறுத்தும் விதமாக ரஷ்ய அரசு உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை பதிவிட்டுவருகின்றன.

குறிப்பாக, ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடையை முன்னணி பொருளாதார சக்திகள் விதித்துவருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் முன்னணி கால்பந்து கிளப்கள் மோதும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீடர்ஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற இருந்தது.

ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையை அடுத்து, இறுதிப்போட்டியை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள மைதானத்தில் நடத்தவுள்ளது. இந்த இறுதிப் போட்டியானது வரும் மே 28ஆம் தேதி நடைபெறும். மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் அணிகள் மோதும் போட்டிகள் நடைபெறும் பொது இடங்களை விரைவில் அறிவிப்போம் என ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:27 நாட்டு தலைவர்களிடம் கேட்டேன்; எல்லாரும் அச்சப்படுகிறார்கள் - உக்ரைன் அதிபர் உருக்கமான உரை

ABOUT THE AUTHOR

...view details