தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாரா ஈட்டி எறிதலில் புதிய சாதனை! - இந்தியன் கிராண்ட்பிரிக்ஸ் ஈட்டி எறிதல்

பாட்டியாலா: இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் ஈட்டி எறிதல் தடகளப் போட்டியின் பாரா பிரிவில் சுமித் ஆன்டில் புதிய தேசிய சாதனையைப் படைத்து, தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

Para javelin thrower Sumit Antil breaks record
Para javelin thrower Sumit Antil breaks record

By

Published : Mar 7, 2021, 11:00 AM IST

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில், மூன்றாவது இந்தியன் கிராண்ட்பிரிக்ஸ் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பாரா ஈட்டி எறிதல் பிரிவில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுமித் ஆன்டில் பங்கேற்றார்.

இப்போட்டியில் சுமித் ஆன்டில் 66.43 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து, புதிய தேசிய சாதனையைப் படைத்து, தங்கப் பதக்கத்தையும் உரித்தாக்கினார். இப்போட்டியில் வென்றதன் மூலம் டோக்கியோ பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு, சுமித் ஆன்டில் தகுதிப்பெற்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப் தொடரில், சுமித் ஆன்டில் 66.18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தேசிய சாதனையைப் படைத்தார். தற்போது தனது சாதனையை தானே முறியடித்து புதிய தேசிய சாதனையை சுமித் ஆன்டில் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

ABOUT THE AUTHOR

...view details