பெங்களூரு:கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இன்று தேசிய அளவிலான பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடி தந்த சுமித் அன்தில் , யோகேஷ் கதுனியா மற்றும் பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
பாரா தடகளப் போட்டிகள்... உலக சாதனைப்படைத்த இந்தியர்கள் - new world records
பெங்களூரில் நடைபெற்ற பாரா தடகள சாம்பியன்ஷிப் போடிகளில் ஈட்டி எறிதலில் சுமித் அன்தில் மற்றும் வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா புதிய உலக சாதனைப் படைத்துள்ளனர்.
இதில் சுமித் அன்தில், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் 68.62 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனைப்படைத்தார். இதற்கு முந்தைய உலக சாதனையினையும் சுமித் அன்தில் முறியடித்தார். கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கின் போது 65.88 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனைப்படைத்திருந்தார் சுமித் அன்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
யோகேஷ் கதுனியா வட்டு எறிதலில் 48.34 மீட்டர் தூரத்திற்கு எறிந்து புதிய உலக சாதனைப் படைத்தார். சாதனைப் படைத்த இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: இந்திய கிளப் அணிகளுக்கு திட்டமிட்ட போட்டிகளில் பங்கேற்க அனுமதி வேண்டும்... ஃபிஃபாவிடம் மத்திய அரசு கோரிக்கை...