அமெரிக்காவில் ஐஸ் ஹாக்கி (ஹாக்கி லீக்) மிகவும் பிரபலமானது. இதில், பென்சில்வேனியா மாகணத்தில் உள்ள ஹெர்ஷே நகரில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கி மைனர் லீக் போட்டியில், ஹெர்ஷே பியர்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஹார்ட்ஃபோர்டு வுல்ஃப்பேக் அணியை வீழ்த்தியது. இதனிடையே, ஹெர்ஷே பியர்ஸ் அணி முதல் கோல் அடித்தவுடன் அதை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் தங்களிடமிருந்த கரடி பொம்மைகளை களத்தில் தூக்கி வீசினர்.
ஐஸ் ஹாக்கி போட்டியில் ஒரு கோலுக்கு 45 ஆயிரம் கரடி பொம்மைகள் பரிசு! - ஹெர்ஷே பியர்ஸ்
அமெரிக்காவில் ஐஸ் ஹாக்கி போட்டியில் ஹெர்ஷே பியர்ஸ் அணியின் முதல் கோலை கொண்டாடும் விதமாக, ரசிகர்கள் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரடி பொம்மைகளை களத்தில் வீசிய வீடியோ இணையதளத்தில் வைரலானது.

இதனால், 45, 650 கரடி பொம்மைகள் களத்தில் குவிந்தது, ஐஸ் ஹாக்கி களமே கரடி பொம்மைகளால் காட்சியளித்தது. களத்தில் வீசப்பட்ட 45,650 கரடி பொம்மைகளை சேகரித்த போட்டி ஒருங்கிணைப்பார்கள், அவற்றை அப்பகுதியை சுற்றியுள்ள 40 தொண்டு நிறுவனங்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பரிசாக வழங்கவுள்ளனர்.
இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் முதல் வார ஞாயிற்றிக்கிழமையின் போது ஹெர்ஷே அணிகள் விளையாடும் போட்டியில் கடைப்பிடிப்பது வழக்கம். இம்முறை ரசிகர்களால் 45,650 கரடி பொம்மைகள் மைதானத்தில் வீசப்பட்டது புதிய உலக சாதனையாக அமைந்தது. இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ரசிகர்கள் 34,798 கரடி பொம்மைகளை வீசியது உலக சாதனையாக இருந்தது.