ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிர் 81 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, உலக சாம்பியனும் - சீன வீராங்கனையுமான வாங் லினாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் பெற்றத் தந்தார் பூஜா ராணி! - பூஜாராணி
பாங்காக்: ஆசிய குத்துச்சண்டை தொடரின், மகளிர் 81 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதன் மூலம் பூஜா ராணி இந்தத் தொடரில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். முன்னதாக, ஆடவர் 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமிட் பங்கல் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ளனர். ஆடவர் பிரிவில் 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் மற்றும் மகளிர் பிரிவில் 1 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் ஆகிய பதக்கங்களை கைப்பற்றினர். கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரை விட இந்தத் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் கூடுதலாக இரண்டு பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.