பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஃபார்முலா ஒன் கார் பந்தைய வீரர் அயர்டன் செனா, எஃப் 1 போட்டிகளில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மார்ச் 21, 1960இல் பிறந்த இவர் 1988,1990,1991இல் மூன்றுமுறை ஃபார்முலா ஒன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினார்.
இவர் டோல்மேன், மெக்லாரென், லோடஸ், வில்லியம்ஸ் அணிகளுக்காக 41 கிராண்ட்பிரிக்ஸ் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு கடும் போட்டியாளராக இருந்தவர் பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த அலென் பிரோஸ்ட். போட்டிகளின் போது பலசமயங்களில் இவர்களது கார்கள் மோதிக்கொள்வதும் வழக்கம்தான்.
சிறப்பாக சென்றுகொண்டிருந்த இவரது பயணம் 1994இல் முடிவுக்குவந்தது. சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சான் மிரானோ கிராண்ட்பிரிக்ஸ் தொடர் இத்தாலியின் இமாலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற அயர்டன் செனா வழக்கம் போல தனது காரை வேகமாக ஓட்டிச் சென்றபோது எதிர்பாரவிதமாக ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 34 மட்டுமே.
இச்சம்பவம் ஃபார்முலா ஒன் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்தாண்டு இவரது 25ஆம் ஆண்டு நினைவு தினத்தை சென்னா நாளாக பிரேசிலில் அனுசரிக்கப்பட்டது.
இதையும் படிங்க:பார்வையாளர்களின்றி நடைபெறுகிறதா பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ்?