வெனிசுலாவுக்காக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் வாள்வீச்சில் தங்கப்பதக்கம் வென்றவர் ரூபன் லிமார்டோ. இன்னும் வாள்வீச்சில் பயிற்சி செய்து வரும் இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.
ஆனால் சமீபத்தில் இவர் தனது வேலை குறித்து பதிவிட்ட ட்வீட், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் கரோனா சூழலுக்கு நடுவே, தனது தேவைகளுக்காக உணவு டெலிவரி செய்வது சமூகவலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.