தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது! - டோக்கியோ ஒலிம்பிக்

இந்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக்கிற்கான சுடர் கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டது.

olympic-flame-is-lit-marking-start-of-build-up-to-tokyo-2020
olympic-flame-is-lit-marking-start-of-build-up-to-tokyo-2020

By

Published : Mar 12, 2020, 11:11 PM IST

2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஜூலை மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதிவரை நடக்கவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஒலிம்பிக் சுடரேற்றும் நிகழ்வு இன்று கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஹேரா கோயிலுக்கு முன்பாக பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

இதில் ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற அன்னா கோரோகாக்கி முதல் நபராக ஒலிம்பிக் சுடரை கையில் ஏந்தினார். இதையடுத்து 2004ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் தங்கம் வென்ற முசுக்கி நொகோச்சி சுடரை வாங்கிக்கொண்டார்.

ஒலிம்பிக் சுடரை கையில் ஏந்திய அன்னா

கிரீஸ் வழியாக ஏழு நாள்கள் ரிலே போட்டியைப் போல் சுற்றிவந்து, 1896ஆம் ஆண்டில் முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற ஏதென்ஸில் உள்ள புனரமைக்கப்பட்ட புதிய மைதானத்தில் அடுத்த வாரம் நடக்கவுள்ள மற்றொரு விழாவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் குழு அலுவலர்களிடம் இந்த சுடர் ஒப்படைக்கப்படவுள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலால், இவ்விழாவிற்கு பார்வையாளர்கள் யாரும் முதல்முறையாக அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இதுவரை 74 இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி!

ABOUT THE AUTHOR

...view details