தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

4 முறை ஒலிம்பிக் சாம்பியனுக்கு நேர்ந்த பரிதாபம்!

4 முறை ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் மோ ஃபரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

Olympic champion Mo Farah fails to qualify for Tokyo Olympic's Olympic champion Mo Farah Mo Farah fails to qualify for Tokyo Olympic's மோ ஃபரா தகுதி டோக்கியோ ஒலிம்பிக் ஒலிம்பிக் தகுதிச் சுற்று 4 முறை ஒலிம்பிக்
Olympic champion Mo Farah fails to qualify for Tokyo Olympic's Olympic champion Mo Farah Mo Farah fails to qualify for Tokyo Olympic's மோ ஃபரா தகுதி டோக்கியோ ஒலிம்பிக் ஒலிம்பிக் தகுதிச் சுற்று 4 முறை ஒலிம்பிக்

By

Published : Jun 26, 2021, 3:40 PM IST

Updated : Jun 26, 2021, 5:25 PM IST

மான்செஸ்டார்: ஒலிம்பிக் தடகளத்தில் நான்கு முறை சாம்பியனான மோ ஃபரா லண்டனில் நடந்த தகுதித் சுற்றில் தகுதி பெற தவறிவிட்டார்.

சோமாலியாவில் பிறந்து இங்கிலாந்து நாட்டுக்காக விளையாடிவருபவர் முகம்மது முக்தார் ஜாமா ஃபரா என்ற மோ ஃபரா. இவர் ஒலிம்பிக் தடகளத்தில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றவர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) நடந்த 10 ஆயிரம் மீட்டர் டோக்கியோ ஒலிம்பிக் தகுதி போட்டியில் தகுதி பெறவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், “இந்த இரவு கடினமாக நீளமான இரவாக இருக்க போகிறது. நான் நிர்ணயித்த நேரத்துக்குள் பந்தய தூரத்தை கடக்க முயற்சித்தேன். ஆனால், எனக்கான நேரம் முடிந்துவிட்டது. மிகவும் கடினமாக உணர்கிறேன்” என்றார்.

ஒலிம்பிக் தகுதி போட்டியில் பந்தய தூரத்தை 27 நிமிடங்கள் 28 விநாடிகளுக்குள் கடக்க வேண்டியிருந்தது. ஆனால் மோ ஃபரா 27 நிமிடங்கள் 47.04 விநாடிகளில்தான் கடந்தார். இதனால் மோ ஃபராவால் டோக்கியோ ஒலிம்பிக்கு தகுதி பெற முடியவில்லை.

மோ ஃபரா 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் 10 ஆயிரம் மீட்டர் தூரத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றிருந்தார்.

இதையும் படிங்க : ஒலிம்பிக்: ரூ.3 கோடி பரிசுத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு

Last Updated : Jun 26, 2021, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details