நார்வேயில் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இருக்கிறது.
இப்போட்டியில் அண்மையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த வாய்ப்பை அவர் மறுத்திருக்கிறார்.
இதுகுறித்து பஜ்ரங் புனியா கூறுகையில், 'எனக்கு முழங்காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்காக 6 வாரத்திற்கு உடற்பயிற்சி செய்யக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனவே, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் என்னால் பங்கேற்க முடியாது' எனத் தெரிவித்தார்.