தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாரியப்பன் தங்கவேலு, ரோஹித் சர்மாவுக்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது! - அர்ஜுனா விருது

Olympian mariyappan awarded Rajiv Khel Ratna Award
Olympian mariyappan awarded Rajiv Khel Ratna Award

By

Published : Aug 21, 2020, 5:05 PM IST

Updated : Aug 21, 2020, 7:18 PM IST

17:04 August 21

பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று அசத்திய மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மத்திய அரசின் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது பெற்ற வீரர்கள்

விளையாட்டுத் துறையில் சாதனை புரியும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசினால் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, தயான்சந்த் விருது, துரோணாச்சாரியா விருது ஆகிய உயரிய விருதுகள் அளித்து கௌரவிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று (ஆக.21) மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் அறிவித்துள்ளது. அந்தத் தகவல் வருமாறு:-

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது:  

  • இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா
  • இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால்
  • டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா
  • மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
  • பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு.

அர்ஜூனா விருது:  

  • கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா
  • கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா
  • அட்னானு தாஸ் (வில்வித்தை)
  • டூட்டி சந்த் (தடகளம்)
  • சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி(பேட்மிண்டன்)
  • சிராக் சந்திரசேகர் செட்டி (பேட்மிண்டன்)
  • சுபேதர் மணிஷ் கவுசிக்(குத்துச்சண்டை)
  • லாவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை)
  • அஜய் ஆனந்த்(குதிரை ஏற்றம்)
  • அக்‌ஷய்தீப் சிங் (ஹாக்கி)
  • தீபிகா (ஹாக்கி), தீபக்(கபடி)
  • கலே சரிக்கா சுதாகர்(கோ-கோ)
  • தத்து போகனல்(ரோவர்)
  • மனு பாக்கர்(துப்பாக்கி சுடுதல்)
  • சௌரப் சௌத்ரி(துப்பாக்கி சுடுதல்)
  • சுஹாஸ் பட்கர் (டேபிள் டென்னிஸ்)
  • திவிஜ் ஷரன்(டென்னிஸ்)
  • ஷிவ கேசவன்(தடகளம்)
  • திவ்யா கரன்(குத்துச்சண்டை)
  • ராகுல்(குத்துச்சண்டை)
  • சுயாஷ் நாராயன் (பாரா நீச்சல்)
  • சந்தீப்(பாரா தடகளம்)
  • மனிஷ் நர்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்)  

தயான் சந்த் விருது:  

  • குல்திப் சிங்(தடகளம்)
  • ஜின்சி பிலிப்ஸ்(தடகளம்)
  • பிரதீப் ஸ்ரீகிருஷ்ணன் (பேட்மிண்டன்)
  • திருப்பதி முருகன் (பேட்மிண்டன்)
  • உஷா (குத்துச்சண்டை),
  • லாக்கா சிங் (குத்துச்சண்டை)
  • சுக்விந்தர் சிங் (கால்பந்து)
  • அஜித் சிங்(ஹாக்கி)
  • மன்ப்ரீத் சிங்(கபடி),
  • சத்யபிரகாஷ் திவாரி(பாரா பேட்மிண்டன்)
  • மன்ஜித் சிங் (ரோவிங்)
  • சச்சின் நாக்(நீச்சல்)
  • நந்தன் பால்(டென்னிஸ்)
  • ஹூடா(மல்யுத்தம்)
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா தடகள வீரர் ரஞ்சித் குமார்

இதையும் படிங்க:”ஓய்வு என்ற வார்த்தையே உங்களுக்கு இல்லை!” - ரெய்னாவுக்கு பிரதமர் கடிதம்!

Last Updated : Aug 21, 2020, 7:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details