உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் நூர் சுல்தானில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் தங்க மங்கை என்றழைக்கப்படும் வினேஷ் போகத் 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார்.
காமென்வெல்த், ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்ற இவர், இம்முறை தங்கம் வெல்ல மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், இரண்டாம் சுற்றுப் போட்டியில் அவர் நடப்பு உலகச் சாம்பியனான மயு முகைடாவிடம் (mayu Mukaidaa) 0-7 என்றக் கணக்கில் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, அவர் ரீ-பேஜ் (Repage) முறையில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். அதன்படி முதலில் உக்ரைனின் யுலியாவை 5-0 எனவும், அமெரிக்காவின் சாராவை 8-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்குத் தகுதிப் பெற்றுள்ளார்.
இதன்மூலம், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இந்நிலையில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அவர் க்ரீஸ் நாட்டின் மரியா ப்ரேவோலரகி (Maria Prevolariki)உடன் மோதினார். இதில், சிறப்பாக செயல்பட்ட வினேஷ் போகத் 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் போகத்!