உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவில் எகடரின்பர்க் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய வீரர் அமித் பங்கல் 52 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பிலிஃபைன்ஸ் வீரர் பாலம் கார்லோவுடன் மோதிய அவர் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம், அவர் வெண்கலப்பதகத்தை உறுதிச் செய்துள்ளார்.
அதேபோல, நடைபெற்ற 63 கிலோ எடைப் பிரிவுக்கான காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக், பிரேசிலைச் சேர்ந்த வான்டர்சன் டி ஒலிவைரா (Wanderson De Oliveira) உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், ஆதிக்கம் செலுத்திய மனிஷ் கவுசிக் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றதால், அவரும் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.
இதன்மூலம், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இரண்டு இந்திய வீரர்கள் முன்னேறுவது இதுவே முதல்முறை. இதனால், இவர்கள் தங்கப் பதக்கம் வென்று தாயகம் திரும்புவார்களா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க:என் வெற்றியை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன் - குத்துச்சண்டை வீரர்