தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#RWC2019: உருகுவேவை வச்சு செய்த ஜார்ஜியா! - ஜார்ஜியா அணி

டோக்கியோ: உலகக்கோப்பை ரக்பி தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஜார்ஜியா அணி 33-07 எனற கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது.

#RugbyWorldCup2019

By

Published : Sep 29, 2019, 5:27 PM IST

உலகக்கோப்பை ரக்பி தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்றைய போட்டியில் குரூப் டிபிரிவில் இடம்பெற்றுள்ள ஜார்ஜியா அணி உருகுவே அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜார்ஜியா அணி, உருகுவே அணியை புரட்டி எடுத்தது. உருகுவே அணி புள்ளிக்கணக்கை உயர்த்த பெரும் முயற்சி செய்தாலும், ஜார்ஜியா அணி தனது பலமான தாக்குதலினால் உருகுவேவை சிதறடித்தது.

இறுதியில் ஜார்ஜியா அணி 33-07 என்ற புள்ளிகளின் அடிப்படையில் உருகுவே அணியை வீழ்த்தி இத்தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் ஜார்ஜியா அணி குரூப் டி பிரிவில் 5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. உருகுவே அணி தனது முதல் தோல்வியை சந்தித்து 5 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: இலங்கைக்கு கிடைத்த மலிங்கா 2.0!

ABOUT THE AUTHOR

...view details