தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#RugbyWorldcup: 'முடிஞ்சா பிடிய்யா... பார்ப்போம்' - நமிபியாவை நடுங்க வைத்த நியூசிலாந்து! - sports headline

டோக்கியோ: உலகக்கோப்பை ரக்பி தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 71-09 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

#RugbyWorldcup

By

Published : Oct 6, 2019, 7:11 PM IST

#RugbyWorldcup:உலகக்கோப்பை ரக்பி தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் நியூசிலாந்து அணி நமிபியா அணியை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே நியூசிலாந்து அணி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து காட்டிய அதிரடியில் அந்த அணி முதல் பாதி முடிவிலேயே தனது வெற்றியை உறுதிசெய்தது.

நியூசிலாந்து-நமிபியா

அதனைத்தொடர்ந்து ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 71-09 என்ற புள்ளிகள் அடிப்படையில் நமிபியா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை ரக்பி தொடரின் குரூப் ஏ பிரிவில் 14 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

இதையும் படிங்க: விலையேற்றம் கண்ட மலர்கள்... குஷியான விவசாயிகள்’

ABOUT THE AUTHOR

...view details