தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#RugbyWorldcup: எங்க வந்து யார் கிட்ட... ஹாட்ரிக் வெற்றி பதித்த ஜப்பான்! - ஜப்பான் வெற்றி

டோக்கியோ: உலகக் கோப்பை ரக்பி தொடரின் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவைச் சேர்ந்த ஜப்பான் அணி 38-19 என்ற புள்ளிக்கணக்கில் சமோவாவை வீழ்த்தியது.

#RugbyWorldcup

By

Published : Oct 5, 2019, 11:36 PM IST

ஜப்பானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை ரக்பி தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் குரூப் ஏ பிரிவைச் சேர்ந்த ஜப்பான் அணி சமோவா அணியை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணி ஆரம்பம் முதலே சமோவா அணியை புரட்டியெடுத்தது. இதன் மூலம் ஜப்பான் அணி 38-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமோவா அணியை வீழ்த்தியது.

ஜப்பான் - சமோவா

இந்த வெற்றியின் மூலம் ஜப்பான் அணி உலகக் கோப்பை ரக்பி தொடரில் பங்குபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதித்துள்ளது. இதன் மூலம் ஜப்பான் அணி குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.

இதையும் படிங்க:#UCL:"என்னையாடா டார்ச்சர் பண்ண"-பந்து மிஸ் ஆனதால் பயிற்சியாளரை உதைத்த கால்பந்து வீரர்!

ABOUT THE AUTHOR

...view details