சர்வதேச செஸ் கூட்டமைப்பு(FIDE) சார்பில் நடைபெற்று வரும் கிராண்ட்பிரிக்ஸ் செஸ் போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் ரனுக் சத்வானி, ஆர்மீனிய கிராண்ட்மாஸ்டரான கேப்ரியல் சாக்ரிசியனை எதிர்த்து போட்டியிட்டார்.
இந்தியாவின் 65ஆவது கிராண்ட்மாஸ்டர் 'சத்வானி' - indias youngest grandmasater
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வரும் செஸ் விளையாட்டில் இந்தியாவின் 65ஆவது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை ரனுக் சத்வானி பெற்றுள்ளார்.
#RaunakSadhwani
இப்போட்டியில் 13 வயதே ஆன சத்வானி, கிராண்ட்மாஸ்டர் கேப்ரியல் சாக்ரிசியனுடன் நடைபெற்ற போட்டியில் ஏழு சுற்றுகளில் இருந்து நான்கு புள்ளிகளைப் பெற்றார்.
இதன் மூலம் கிராண்ட்மாஸ்டராக தேவையான 2 ஆயிரத்து 500 புள்ளிகளைப் பெற்று ரனுக் சத்வானி இந்தியாவின் 65ஆவது கிராண்ட்மாஸ்டராக தகுதி பெற்றுள்ளார்.