தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#PKL2019: பட்டியல் இறுதிக்குச் சென்ற தமிழ் தலைவாஸ் பயணம்! - புள்ளிப்பட்டியலில் கடைசியிடத்திற்கு தள்ளப்பட்டது.

நொய்டா: புரோ கபடி லீக்கின் 128 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 33-29 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.

#PKL2019:

By

Published : Oct 10, 2019, 7:56 AM IST

#PKL2019 : இந்தாண்டிற்கான புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 128ஆவது லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் அட்டாக், டிஃபென்ஸ் என இரு பிரிவுகளிலும் சம பலத்துடன் மோதிக்கொண்டனர். இதனால் முதல் பாதி ஆட்டம் 13-13 என சமநிலையில் இருந்தது.

அதன்பின் தொடர்ந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி தனது புள்ளிக்கணக்கை உயர்த்தத் தொடங்கியது.

இதனால் பெங்கால் வாரியர்ஸ் அணி ஆட்ட நேர முடிவில் 33-29 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனுக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் பங்கெற்ற 22 போட்டிகளில் நான்கில் வெற்றி, மூன்று டிரா, 15 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசியிடத்திற்குத் தள்ளப்பட்டது.

இதையும் படிங்க:

ABOUT THE AUTHOR

...view details