புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், இன்றைய போட்டியில் யூ மும்பா - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் போட்டிபோட்டுக்கொண்டு புள்ளிகளைப் பெற்றனர். இதனால், முதல் பாதி ஆட்டத்தில் யூ மும்பா அணி 17-13 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது.
#PKL: பாட்னாவை பந்தாடி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறிய யூ மும்பா அணி! - ஏழாவது சீசன்
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் யூ மும்பா அணி 30-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி குவாலிபையர் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
pkl match update
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது பாதியில் யூ மும்பா அணி, ரையிடிங், டிஃபெண்டிங் இரண்டிலும் அசத்தியது. இறுதியில், யூ மும்பா அணி 30 - 26 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் யூ மும்பா அணி விளையாடிய 20 போட்டிகளில் 11 வெற்றி, எட்டு தோல்வி, ஒரு டிரா என 64 புள்ளிகளுடன் புரோ கபடி லீக்கின் குவாலிஃபையர் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இதையும் படிங்க: சங்ககாராவுக்கு அடித்த யோகம்.. இவர்தான் ஃபர்ஸ்ட்!