புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற 64ஆவது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் முதல் பாதியில் போட்டிபோட்டுக் கொண்டு புள்ளிகளைப் பெற்றனர். குறிப்பாக, தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் எட்டு புள்ளிகளைப் பெற்று அசத்தினார். முதல் பாதி முடிவில் 15-14 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி முன்னிலை வகித்தது.
#PKL: பெங்கால் வாரியர்ஸுடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்! - புரோ கபடி லீக்
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 26-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால், ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 26-35 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது. பெங்கால் வாரியர்ஸ் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் அதிகபட்சமாக 10 புள்ளிகளைப் பெற்றார்.
இந்த வெற்றியின்மூலம், பெங்கால் வாரியர்ஸ் அணி விளையாடிய 11 போட்டிகளில் ஆறு வெற்றி, மூன்று தோல்வி, இரண்டு டிரா என மொத்தம் 39 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், தமிழ் தலைவாஸ் அணி 11 போட்டிகளில் மூன்று வெற்றி, ஆறு தோல்வி, இரண்டு டிரா என 25 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.