தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

புரோ கபடி: பிங்க் பாந்தர்ஸ்க்கு அதிர்ச்சி தந்த யுபி யோதா! - Pro kabaddi league

புரோ கபடி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டிகளில் ஹரியானா, யுபி யோதா அணிகள் வெற்றி பெற்றன.

kabaddi

By

Published : Aug 19, 2019, 11:32 PM IST

புரோ கபடி லீக் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு மைதானத்தில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில் யு மும்பா அணியும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் புள்ளியை மும்பை அணி பெற்றாலும் அதைத் தொடர்ந்து ஹரியானா வீரர்கள் தொடர்ச்சியாக புள்ளிகளைப் பெற்று அசத்தினர். இதனால் முதல் பாதியின் முடிவில் ஹரியானா அணி 16-8 என முன்னிலை வகித்தது.

பிற்பாதியில் எழுச்சி கண்ட மும்பா அணியும் புள்ளிகளைப்பெற்று சமநிலையோடு சென்றது. இறுதியில் ஹரியானா அணி 30-27 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிகபட்சமாக ஹரியானா அணியின் ரெய்டர் விகாஷ் கண்டோலா ஒன்பது புள்ளிகளைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஹரியானா அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

பிங்க் பாந்தர்ஸ் - யுபி யோதா போட்டியின் பரபரப்பான நிமிடம்

இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் முதலிடத்தில் உள்ள பலம் வாய்ந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை, பதினொறாம் இடத்தில் உள்ள யுபி யோதா அணி எதிர்கொண்டது. இதில் சிறப்பாக ரெய்டு, மற்றும் டிஃபெண்டு செய்த யுபி அணி 31-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் யுபி அணி எட்டாம் இடத்திற்கு முன்னேறியது.

ABOUT THE AUTHOR

...view details