புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசனுக்கான போட்டிகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற ஐந்தாவது போட்டியில், யு மும்பா அணி, ஜெய்பூர் பிங் பேந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது.
ரைட், டிஃபென்டிங் என இரண்டிலும் அசத்திய ஜெய்பூர் பிங் பேந்தர்ஸ் இப்போட்டியில் 42-23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் யு மும்பா அணியை வீழ்த்தியது. குறிப்பாக, ஜெய்பூர் அணியின் நட்சத்திர ரைடர் தீபக் நிவாஸ் ஹுடா 11 புள்ளிகளை எடுத்து இப்போட்டியில் தனது அணி வெற்றிபெற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
ஹரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டான் இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆறாவது லீக் போட்டியில் புனேரி பல்டான் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஹரியானா வீரர்கள் ரைடிங், டிஃபென்டிங் இரண்டிலும் அசத்தி புள்ளிகளை பெற்றுவந்தனர். குறிப்பாக, 14ஆவது நிமிடத்தில் புனேரி பல்டான் அணியை ஹரியானா அணி ஆல் அவுட் செய்தது. இதனால், ஹரியானா 20-8 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
அதன்பிறகு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட ஹரியானா அணி, இறுதியில் 34-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.நாளை நடைபெறவுள்ள ஏழாவது லீக் போட்டியில் யூ.பி. யோதா - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதைத்தொடர்ந்து எட்டாவது லீக் போட்டியில் தெலுங்கு டைடன்ஸ் அணி தபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.