2019ஆம் ஆண்டுக்கான புரோ கபடி தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், இன்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதியது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் டிஃபெண்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை சரிசமமாக பெற்று வந்தனர். இருப்பினும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி முதல் பாதி முடிவில் 13-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.
#PKL: டையில் முடிந்த தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் போட்டி - பெங்கால் வாரியார்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ்
தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்வால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 28-28 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது பாதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை ஆல் அவுட் செய்து 17-12 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், அதன் பிறகு, ஆட்டத்தில் எழுச்சி பெற்ற பெங்கால் வாரியர்ஸ் அணி, சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு ஈடுகொடுத்தது.
ஆட்டம் முடியவிருந்த கடைசி ஏழு நிமிடத்தில், இரு அணிகளும் இப்போட்டியில் மல்லுக்கட்டியதால், ஆட்டம் பரபரப்புக்குச் சென்றது. ஆட்ட நேர முடிவில் 29 - 29 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டையில் முடிந்தது.