மகளிர் உலகக்கோப்பை கைப்பந்து தொடர் ஜப்பான் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பத்தாவது லீக் சுற்றில் நடப்பு சாம்பியனான சீன அணி, செர்பிய அணியை எதிர்கொண்டது.
இதில் ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கிய சீனா, முதல் செட்டை 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 25-21 என்ற கணக்கில் சீனாவிடம் போராடி இழந்தது செர்பியா.
அதன் பின் சீனா மூன்றாவது செட்டையும் 25-16 என்ற கணக்கில் கைப்பற்றி செர்பியாவுக்கு அதிர்ச்சியளித்தது. இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரின் பத்தாவது லீக் சுற்றில் சீனா 3-0 என்ற செட் கணக்கில் செர்பியாவை அதிரடியாக வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் சீன அணி இத்தொடரில், பங்கேற்ற பத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:#FIVBWorldcup: 'ஓங்கி அடிச்சா, எங்களுக்கு எல்லாமே பாயின்ட்தான்' - அசால்ட் செய்த கொரியா, டொமினிக்!