மகளிர் உலகக்கோப்பை கைப்பந்து தொடரின் பதினோறாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சீனா அணி, அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது.
ஏற்கனவே இத்தொடரில் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சீன அணி அர்ஜென்டினா அணியையும் விட்டுவைக்கவில்லை.
இப்போட்டியிலும் பலம் வாய்ந்த சீனா 25-17, 25-14, 25-12 என அனைத்து புள்ளிகளையும் கைப்பற்றி அர்ஜென்டினா அணிக்கும் தனது அதிரடியை காண்பித்தது.