மகளிர் உலகக்கோப்பை கைப்பந்து தொடர் ஜப்பான் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் எட்டாவது லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி ஜப்பான் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் ஆரம்பம் முதலே தனது அதிரடியை காட்டத் தொடங்கிய பிரேசில் அணி முதல் செட்டை 25-14 என்றும், இரண்டாவது செட்டை 25-21 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியும் ஜப்பான் அணியின் வெற்றிக் கனவைத் தகர்த்தது.
அதன்பின்னும் விடாத பிரேசில் அணி மூன்றாவது செட் கணக்கையும் 25-23 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் உலகக்கோப்பை எட்டாவது லீக் சுற்றில் பிரேசில் அணி 3-0 என்ற செட் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை கைப்பந்துத் தொடரில் பிரேசில் அணி ஆடிய எட்டு போட்டிகளில் 5இல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறது.
இதையும் படிங்க:#FIVBWorldcup: எட்டையும் ஹிட்டாக்கிய சீனா...! கென்யாவுக்கும் சவுக்கடி!