தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#AsianTableTennisChampionships2019: தவிடுபொடியாகிய 43 ஆண்டு கனவு...! - Sathiyan Gnasekaran records

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிச் சுற்றில் முன்னேறிய இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

Sathiyan

By

Published : Sep 22, 2019, 8:21 AM IST

24ஆவது ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் இந்தோனேசியாவின் யோகியகர்டாவில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வடகொரியாவின் அன்-ஜி சாங்கை எதிர்கொண்டார். இதில், சிறப்பாக செயல்பட்ட சத்தியன் ஞானசேகரன் 11-7, 11-8, 11-6 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம், இந்தத் தொடரில் 43 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமைபெற்றார். முன்னதாக, இந்திய வீரர் சுதிர் பாட்கே 1976 ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் காலிறுதிச் சுற்றுவரை சென்றார்.

இதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் அவர் உலகின் நான்காம் நிலை வீரரான சீனாவைச் சேர்ந்த லின் கவ்யானினை (Lin Gaoyuan) எதிர்கொண்டார். இதில், கடுமையாக போராடிய சத்தியன் 7-11, 5-11, 11-8, 8-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால், 43 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிச் சுற்றில் முன்னேறிய இவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட கனவு தற்போது தவிடுபொடியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details