உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் மார்ச் 15 முதல் 26 வரை டெல்லியில் நடைபெறுகிறது. தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக, இந்த உலகக்கோப்பை தொடரில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் கலந்து கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.
ஏனெனில், மத்திய குடும்பம் மற்றும் சுகாதார நலத்துறை அமைச்சகம் கொரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், இந்த உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அனைத்து நாட்டவரும் பங்கேற்க முடியாது என்பதால், இதில் பங்கேற்கும் நபர்களுக்கு தரவரிசைக்கான புள்ளிகள் அளிக்கப்படாது என்று சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.