தமிழ்நாடு

tamil nadu

பார்முலா ஒன் கார் பந்தயம்: ரசிகர்கள் வெளியே, சுகாதார ஊழியர்கள் உள்ளே!

By

Published : Nov 8, 2020, 4:44 PM IST

மனமா(பஹ்ரைன்): இம்மாத இறுதியில் பஹ்ரைனில் நடைபெறவுள்ள பார்முலா ஒன் கார் பந்தயத்தை நேரில் காண சுகாதார ஊழியர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

F1 race
F1 race

கோவிட்-19 பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார்முலா ஒன் கார் பந்தயம், கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை 13 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. அவற்றில் ஒன்பது போட்டிகளில் வெற்றிபெற்று, 282 புள்ளிகளுடன் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த லீவிஸ் ஹேமில்டன் முதல் இடத்தில் உள்ளார். சக அணி வால்டேரி போடாஸ் 197 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 162 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த ஆண்டிற்கான 15 மற்றும் 16ஆவது பார்முலா ஒன் கார் பந்தயங்கள் பஹ்ரைனில் வரும் நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 6ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. கரோனா பரவல் காரணமாக இந்தப் பந்தயத்தை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், கரோனா காலத்தில் ஓயாமல் பணிபுரிந்த சுகாதார ஊழியர்களை கெளரவிக்கும் விதமாக, பஹ்ரைனில் நடைபெறவுள்ள பார்முலா ஒன் கார் பந்தயங்களை நேரில் காண சுகாதார ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வில் வித்தை வீராங்கனை ஹிமானி மாலிக்குக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details