டெல்லி:உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று(மார்ச்.26) நடைபெற்ற 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் சரீன் வியட்நாமைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான நிகுயென்னை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகத் சரீன் 5-0 என்ற கணக்கில் நிகுயென்னை வீழ்த்தினார். ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற நிகுயென்னை தோற்கடித்து நிகத் சரீன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். நிகத் சரீன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்க வைத்துள்ளார்.