ஜப்பானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ரக்பி தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி கனடா அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் பலம் பொருந்திய நியூசிலாந்து அணி கனடா அணியை புரட்டியெடுத்தது. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் கனடா அணியால் நியூசிலாந்து அணியின் ஆட்டத்திலிருந்து தப்பிக்க இயலவில்லை.
இதனால் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 63-0 என்ற புள்ளிக்கணக்கில் கனடா அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை ரக்பி தொடரின் 'குரூப் பி' பிரிவு புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: #RugbyWorldCup2019:' அட ஒன்னுமே கிடைக்கல போல' - சமோவாவை புரட்டியெடுத்த ஸ்காட்லாந்து!