ஜப்பான் - ஸ்காட்லாந்து
இந்த ஆண்டிற்கான உலகக்கோப்பை ரக்பி தொடர் ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில்குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜப்பான் அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் உலகக்கோப்பையை நடத்தும் ஜப்பான் ஆணி ஆக்ரோஷமாக விளையாடி 27 - 03 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஜப்பான் அணி குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு முன்னேறிவுள்ளது.
நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு உலகச் சாம்பியன் நியூசிலாந்து அணி, இத்தொடரின் தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது.
இதில் சிறப்பாக விளையடிய நியூசிலாந்து அணி 23-13 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி குரூப் பி புள்ளிப்பட்டியலில் நான்கு புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளது. முன்னதாக குரூப் பி புள்ளிப்பட்டியலில் ஐந்து புள்ளிகளைப் பெற்று இத்தாலி அணி முதல் இடத்தில் அங்கம் வகிக்கிறது.
இங்கிலாந்து - டொங்கா
குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி டொங்கா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் தனது வெறித்தனத்தை காட்டிய இங்லாந்து அணி எதிரணியை தெறிக்க விட்டது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி 35-03 என்ற புள்ளிகளின் அடிப்படையில் டொங்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இத்தொடரின் முதல் வெற்றியைப் பெற்று குரூப் சி பிரிவின் புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறிவுள்ளது.
இதையும் படிங்க: #rugbyworldcup2019: முதல் வெற்றியைப் பதிவு செய்தும் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலியா!