தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலக கோப்பை கால்பந்து: செனகலை வீழ்த்தியது நெதர்லாந்து - netherlands beat senegal

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணியில் காக்போ, டேவி கிளாசென் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.

செனகலை வீழ்த்தியது நெதர்லாந்து
செனகலை வீழ்த்தியது நெதர்லாந்து

By

Published : Nov 22, 2022, 9:41 AM IST

Updated : Nov 22, 2022, 10:07 AM IST

தோகா: உலக கோப்பை 22 ஆவது கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஈரானை 6-2 என்ற கணக்கில் பந்தாடியது. இதையடுத்து குரூப் ஏ பிரிவில் நடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் செனகல் அணிகள் மோதின.

இதில் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சி செய்த அனைத்தும் வீணாகின. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் இல்லாமல் 0-0 என்ற கணக்கில் இருந்தது. இதையடுத்து தொடங்கிய 2ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினர்.

இருந்தும் ஆட்டத்தில் கோல எதுவும் அடிக்க இயலவில்லை. ஆட்டம் சமனில் முடியும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் ஆட்டத்தில் 84ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் கோடி காக்போ கோல் அடித்து அசத்தினார். இதனால் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து கூடுதல் நேரத்தில் நெதர்லாந்து அணி மேலும் ஒரு கோல் அடிக்க அந்த அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியில் காக்போ, டேவி கிளாசென் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.

இதையும் படிங்க: சீனா: தொழிற்சாலை தீ விபத்தில் 36 பேர் உயிரிழப்பு

Last Updated : Nov 22, 2022, 10:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details