பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நிர்மி விளையாட்டு போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இதில் அவர் முதல் வாய்ப்பில் 86.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். இரண்டாவது வாய்ப்பில் 89.30 தூரம் ஈட்டி எறிந்து , புதிய தேசிய சாதனை படைத்தார்.
முன்னதாக நீரஜ் சோப்ரா 88.07 தூரம் ஈட்டி எறிந்ததே தேசிய சாதனையாக இருந்தது. தனது சொந்த சாதனையையே நீரஜ் சோப்ரா முறியடித்துள்ளார். தனது 3,4 மற்றும் 5ஆவது வாய்ப்புகளில் ஃபவுல் செய்த நீரஜ் சோப்ரா இறுதி வாய்ப்பில் 85.85 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டி எறிந்தார்.