தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Neeraj Chopra: ஊக்கமாக விளங்கிய நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதலில் டாப் 6ல் இடம்பிடித்த 2 இந்திய வீரர்கள்!

இந்தியாவின் தங்க மகனான நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தொடரில் ஈட்டி எறிதலில் தன்னுடன் பங்கேற்ற மற்ற இரண்டு இந்திய வீரர்களுக்கும் ஊக்கமாக விளங்கியதால், இறுதிப்போட்டியில் இருவரும் டாப் 6-ல் இடம்பெற்றுள்ளனர்.

Neeraj Chopra
Neeraj Chopra

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 8:02 PM IST

ஹைதராபாத்: 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 19ஆம் தேதி ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் தொடங்கியது. இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று கடந்த 27ஆம் தேதி இரவு நடைபெற்றது. இதில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, முதல் முயற்சியில் ஃபவுல் செய்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் தனது அசாதாரண திறமையை வெளிப்படுத்தி 88.17 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து அசத்தினார்.

இதன் மூலம், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்தார். 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார். ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வெள்ளிப் பதக்கத்தையும், செக் குடியரசைச் சேர்ந்த யக்கூப் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

19வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், நீரஜ் சோப்ராவைத் தவிர, மேலும் இரண்டு இந்தியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கர்நாகாவைச் சேர்ந்த டிபி மானு மற்றும் ஒடிஷாவைச் சேர்ந்த கிஷோர் குமார். நீரஜ் சோப்ரா, மற்ற இரண்டு வீரர்களுக்கும் உத்வேகமாக இருந்தார் என்றே கூறலாம். இதன் காரணமாக, மற்ற இரண்டு வீரர்களும் முதல் ஆறு இடங்களுக்குள் வந்தனர். இறுதிச்சுற்று முடிவின்படி, கிஷோர் குமார் ஐந்தாவது இடத்தையும், டிபி மானு ஆறாவது இடத்தையும் பிடித்தனர். கிஷோர் குமார் ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற உள்ளார்.

நீரஜ் சோப்ரா:ஹரியான மாநிலத்தின் பானிபட் நகரில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீரஜ் சோப்ரா. இளம் வயதிலேயே ஈட்டி எறிதல் மீது ஆர்வம் கொண்ட நீரஜ் சோப்ரா, தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் அசத்தியதன் மூலம், இந்திய ராணுவத்தில் சுபேதார் பணியில் சேர்ந்தார். ஜூனியர் உலக தடகளப் போட்டிகளில் வெற்றியை பெற்ற முதலாவது வீரர் மற்றும் ஒலிம்பிக் தடகள போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற முதலாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இதையும் படிங்க: Neeraj Chopra: "தங்க மகன்" நீரஜ் சோப்ரா... கடந்து வந்த பாதை!

ABOUT THE AUTHOR

...view details