டெல்லி: விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு மத்திய அரசின் சார்பில் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.
இனி இவ்விருது இந்திய ஹாக்கி ஜாம்பவானான மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 6 அன்று தெரிவித்திருந்தார்.
ஹாக்கி ஜாம்பவானான மேஜர் தயான்சந்த் அதன்படி இந்த ஆண்டுக்கான விருது, ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவி குமார், பாரா சூட்டர் அவனி லெக்கரா, இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, பெண்கள் கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் உள்ளிட்ட 12 பேருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் சனிக்கிழமை (நவ. 13) வழங்கப்பட்டன.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார். இவர்கள் தவிர லோவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை), ஸ்ரீஜேஷ் பி.ஆர் (ஹாக்கி), சுமித் அன்டில் (பாரா தடகளம்), பிரமோத் பகத் (பாரா பேட்மிண்டன்), மணீஷ் நர்வால் (பாரா ஷூட்டிங்), மன்பிரீத் சிங் (ஹாக்கி) ஆகியோருக்கும் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் கிருஷ்ணா நாகர் கலந்துகொள்ளவில்லை. அவரது தாயாரின் திடீர் மரணத்தால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. அண்மையில் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்தது.
அதேபோல் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்தன.
இதையும் படிங்க : INDIA'S TEST SQUAD நியூசி., டெஸ்ட் தொடர்: கேப்டனாகும் ரஹானே; விராட்டுக்கு ஓய்வு!