நடந்து முடிந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, தடகளப் பிரிவின் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். அந்த தங்கம் பல பெருமைகளையும், சாதனைகளையும் இந்தியாவிற்கு கொண்டு வந்தது.
23 வயதான நீரஜ் சோப்ரா, இந்தியாவுக்கு தடகளத்தில் முதல் பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார். அவர் தங்கம் வென்ற தருணத்தை, டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தின் சிறந்த 10 தருணங்களுள் ஒன்றாக உலக தடகள அமைப்பு அறிவித்துள்ளது. நீரஜ் சோப்ரா, தங்கம் வென்ற தினமான ஆகஸ்ட் 7ஆம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இன்ஸ்டாவில் கலக்கும் நீரஜ்
மேலும், ஒலிம்பிக்கிற்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் நீரஜை ஒரு லட்சத்து 43 ஆயிரம் பின்தொடர்ந்த வந்த நிலையில், தற்போது 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் பின் தொடரும் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.