சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச்சில் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதல் இடத்தை பிடித்தார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ் 86.94 மீட்டர் தூரம் எறிந்து 2ஆவது இடத்தைப் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 83.73 மீட்டர் தூரம் எறிந்து 3ஆவது இடத்தை பிடித்தார்.
டைமண்ட் லீக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார் - நீரஜ் சோப்ரா
சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்துவரும் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்
அதன்படி ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். ஜூலையில் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது நீரஜ் சோப்ராவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் காமன்வெல்த் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. தற்போது காயத்தில் இருந்து மீண்டு வரலாற்று சிறப்புமிக்க டயமண்ட் லீக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:‘நாயகன் மீண்டும் வரார்’...! - கோலியின் சதத்தில் இந்தியா வெற்றி...