இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம் 2012ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ராஜிவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கிவருகிறது.
அதன்படி இந்தாண்டு ஏழு பிரிவுகளின் கீழ் 74 விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு தேசிய விருது வழங்கும் விழா காணொலி கூட்டரங்கு மூலம் நடைபெற்றது. இதில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வீட்டிலிருந்தபடியே விருதுகளை வழங்கினர்.
இதில் இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மாவுக்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதும், இஷாந்த் சர்மாவிற்கு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதும், மற்றொரு தமிழ்நாடு வீரர் மற்றும் பயிற்சியாளரான ரஞ்சித் குமாருக்கு தயான் சந்த் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டன.
விருது பெற்றவர்களின் பட்டியல் மேலும், இந்த விருது வழங்கும் விழாவில் ஒன்பது பேர் தனிமைப்படுத்துதல், உடல்நலக் குறைவு, கரோனா உறுதிசெய்யப்பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் பங்கேற்கவில்லை. அதேசமயம் வரலாற்றில் முதல் முறையாக தேசிய விருது வழங்கும் விழா காணொலி கூட்டரங்கு மூலம் நடைபெற்றது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய சுரேஷ் ரெய்னா!