16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 43 வது தேசிய அளவிலான வாலிபால் போட்டிகள் வேலூர் அடுத்த காட்பாடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று(பிப். 24) முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, டெல்லி, ஹரியானா, மிசோராம், ஒடிசா உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள் குழுவும், 17 மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் குழுவும் கலந்துகொண்டுள்ளது.