கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் பந்தய மைதானத்தில், தேசிய அளவிலான கார் பந்தயம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 பிரிவுகளில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 8 அணிகளை சேர்ந்த 40 கார் பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர் .
சுற்றுவாரியாக நடைபெறும் இப்பந்தயத்தில் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறக்கூடிய வீரர்களுக்கு வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்பர். இதில் வெற்றி பெறும் வீரர், ஆசிய அளவிலான கார் பந்தய போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்பார்கள் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.