இந்திய பளுதூக்குதல் வீரர் ஆர். மாதவன், குத்துச்சண்டை வீராங்கனை ருச்சிகா. இவர்கள் இருவரும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் ஒழுங்காற்றுக் குழு விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை விசாரித்த நாடா, குற்றஞ்சாட்டப்பட்ட வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனையை நடத்தியது. இச்சோதனையின் முடிவில் ஆர். மாதவன் தடைசெய்யப்பட்ட ஃபென்டர்மின், மெஃபென்டர்மின் ரக ஊக்கமருந்தைப் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ஆர். மாதவனுக்கு நான்கு ஆண்டுகள் விளையாட தடைவிதித்து நாடா உத்தரவிட்டுள்ளது.