தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இளம் வீராங்கனை நம்யா கபூர் - ISSF

ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியா சார்பில் பங்கேற்ற வீராங்கனை நம்யா கபூர் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு வயது 14.

நம்யா கபூர்
நம்யா கபூர்

By

Published : Oct 6, 2021, 12:22 AM IST

லிமா: பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ISSF) ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 32 நாடுகளை சேர்ந்த 370 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடரின் ஐந்தாம் நாளான இன்று (அக். 5) மகளிருக்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரவுக்கான போட்டி நடைபெற்றது. இதில், இந்திய சார்பாக 14 வயதான நம்யா கபூர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும், மிக இளம் வயதில் தங்கம் வென்றவர் என்ற பெருமையும் நம்யா கபூர் பெற்றுள்ளார்.

இதே பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றார். இந்த தொடரில் இந்தியா 8 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் முதலிடத்தில் தொடர்கிறது. இந்த தொடரில் மனு பாக்கர் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலக ஆணழகன் பட்டத்தை வென்ற தமிழர்!

ABOUT THE AUTHOR

...view details