இந்திய அணியின் நட்சத்திர மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. இவர் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் வைரசின் தாக்கம் குறையத் தொடங்கியதும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சோனாபட்டில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு அமைச்சக பயிற்சி மையத்தில், பயிற்சிகளை மேற்கொண்டுவந்தார். பின்னர் சர்வதேச வீரர்களுடன் அமெரிக்காவில் ஒருமாத காலம் பயிற்சி மேல்கொள்வதற்கான அனுமதியையும் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக்குழுவிடன் கேட்டிருந்தார்.