கத்தார் தலைநகர் தோஹாவில் ஆறாவது கத்தார் சர்வதேச கோப்பை பளுதூக்குதல் போட்டிகள் இன்று தொடங்கின. இதில் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை சைக்கோம் மீராபாய் சானு, ஸ்னாட்ச், க்ளீன் அண்ட் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் சேர்த்து மொத்தமாக 191 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். இது அவரது சொந்த சாதனையைவிட குறைவானதே ஆகும்.
இந்தாண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற மீராபாய் சானு, 201 கிலோ எடையைத் தூக்கி சாதனைப் படைத்திருந்தார்.
இந்தத் தொடரில் பெறும் புள்ளிகளின் அடிப்படையிலேயே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முடியும். இதில் தற்போது மீராபாய் சானு தங்கம் வென்றிருப்பதால் இவர் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.