விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும், அர்ஜுனா விருது ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பப்ப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
தேசிய விளையாட்டு விருது: விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு! - Ministry extends National Sports Awards deadlin
தேசிய விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 22 வரை விளையாட்டு அமைச்சகம் நீட்டித்துள்ளது.
இதுகுறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பாக பேசுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு வீரர்களை கவுரவப்பிப்பதற்கான விருது ஆகஸ்ட் 29ஆம் தேதி வழங்கப்படும். இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க இன்று கடைசி தேதியாக இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் காரணமாக விண்ணப்பங்களை சமர்பிப்பப்பதற்கான காலக்கெடு ஜூன் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் ஷர்மா, மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் உள்ளிட்டோர் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.