தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மில்கா சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் - fahan akhtar tribute for milkha singh

மறைந்த தடகள ஜாம்பவான் மில்கா சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் சண்டிகரில் தகனம் செய்யப்பட்டது.

மில்கா சிங்
மில்கா சிங்

By

Published : Jun 19, 2021, 7:30 PM IST

சண்டிகர்: இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங் (91) கரோனா தொற்று பாதிப்பால் நேற்றிரவு (ஜூன் 18) காலமானார். தடகளத்தில் உலகளவில் இந்தியாவிற்கு பல பதக்கங்களையும், பெருமையையும் பெற்று தந்தவர் மில்கா சிங்.

'பறக்கும் சீக்கியர்' என்றழைக்கப்பட்ட மில்கா சிங் அவர்களின் மறைவிற்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தும், அவரின் சாதனையை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.

மில்கா சிங் அவர்களின் இறுதிச் சடங்கு சண்டிகரில் அரசு மரியாதையுடன் இன்று மாலை நடைபெற்றது. அவருக்கு நடந்த இறுதி சடங்கில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்தளவிலான பொதுமக்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மறைந்தார் மின்னல் மனிதர் மில்கா சிங்!

ABOUT THE AUTHOR

...view details