சண்டிகர்:இந்திய தடகள வீரர் மில்கா சிங் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சிகிச்சை பெற்றுவருகிறார்.
மில்கா சிங்-குக்கு (91) கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் சண்டிகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு திடீரென கடுமையான குறைந்தது. இதைத்தொடர்ந்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் புதன்கிழமை (ஜூன் 16) அவருக்கு கோவிட் நெகடிவ் என வந்தது. இதையடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். எனினும் அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்துவந்தனர்.
இதற்கிடையில் அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது. அவர் மூச்சு விட சிரமப்படுகிறார். அவரது உடலிலும் ஆக்சிஜன் அளவு குறைந்துவருகிறது. இதனை உறுதிப்படுத்தியுள்ள மருத்துவமனை வட்டாரங்கள் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு (ஜூன் 13) மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் மருத்துவனையில் கோவிட் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : மில்கா சிங் மனைவி காலமானார்!