தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கம்பேக் போட்டியை டிராவில் முடித்த மைக் டைசன் - மைக் டைசன் vs ராய் ஜோன்ஸ் ஜூனியர்

15 வருடங்களுக்கு பின் குத்துச்சண்டை களத்திற்கு திரும்பிய மைக் டைசன், ஜோன்ஸுக்கு எதிரான போட்டியை டிராவுடன் முடித்துள்ளார்.

mike-tyson-roy-jones-jr-settles-for-a-draw-on-comeback-fight
mike-tyson-roy-jones-jr-settles-for-a-draw-on-comeback-fight

By

Published : Nov 29, 2020, 5:46 PM IST

54 வயதாகும் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன், 15 ஆண்டுகளுக்கு பின் குத்துச்சண்டை களத்திற்கு திரும்பினார். நேற்று நடந்த குத்துச்சண்டை போட்டியில் இவருக்கும், 51 வயதாகும் ராய் ஜோன்ஸ் ஜூனியரும் மோதினர்.

2 நிமிடங்கள் கொண்ட 8 ரவுண்டுகளில் ஆடிய இவர்கள், இறுதியாக டிராவில் முடித்தனர். இதைப்பற்ற மைக் டைசன் கூறுகையில், '' சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடுவதை விடவும் நல்ல உணர்வை இந்தப் போட்டி கொடுத்துள்ளது. நாம் அனைவருமே மனிதர்கள் தான். அதனால் இந்த உலகிற்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும்'' என்றார்.

மைக் டைசன் vs ராய் ஜோன்ஸ் ஜூனியர்

இந்தப் போட்டியின் கிடைத்த வருவாய் அனைத்தும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கப்படவுள்ளது.

இந்தப் போட்டி பற்றி ஜோன்ஸ் கூறுகையில், '' மைக் டைசன் என் உடலில் குத்திய பன்ச்கள் அனைத்தும் என் உடலில் பின்னடைவை ஏற்படுத்தியது. டிராவில் முடிந்தது மகிழ்ச்சியே. மீண்டும் ஒரு கண்காட்சி போட்டியில் மோதுவோம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

இதையும் படிங்க:மேட்ச் ஜெய்க்கலனா என்னபா... இதயத்தை வென்ற இந்திய இளைஞர்...!

ABOUT THE AUTHOR

...view details