தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 11, 2019, 12:00 AM IST

ETV Bharat / sports

மீண்டு(ம்) வருவரா கார்பந்தைய ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கர்?

ஜெர்மனியின் நட்சத்திர கார்பந்தைய ஜாம்பவான் வீரர் மைக்கேல் ஷூமேக்கர் ரகசிய சிகிச்சைக்காக பாரிஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Michael Schumacher

ஃபார்முலா ஒன் கார்பந்தைய போட்டியில் ஜாம்பவான் வீரராக திகழ்ந்தவர் ஜெர்மனியின் மைக்கேல் ஷூமேக்கர். ஏழுமுறை கார்பந்தைய போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இவர், 2012இல் கார்பந்தைய போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் 2013 டிசம்பரில் பனிச்சருக்கு விளையாட்டின் போது எதிர்பாரவிதமாக ஏற்பட்ட விபத்தில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக கோமாவில் இருந்துவருகிறார்.

மைக்கேல் ஷூமேக்கர் - கோப்பு காட்சி

இவரது 50ஆவது பிறந்தநாள் கடந்த ஜனவரி மாதம் சத்தமே இல்லாமல் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள pompidou மருத்துவமனையில் ரகசிய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நீண்ட ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இவருக்கு, பிரபல மருத்துவர் பிலிஃப் மெனாஸ்சே (philip menasche) ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

69 வயதான மருத்துவர் பிலிஃப் ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் பலரை காப்பாற்றியுள்ளார். இவரது மருத்துவத்தால் ஷுமேக்கர் மீண்டு வருவாரா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக, ஷூமேக்கர் pompidou இந்த மருத்துவமனையில் இரண்டுமுறை சிகிச்சை எடுத்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details